About Vijay
ஆற்றிய முக்கிய தமிழ்ப்பணிகள்
- செயற்குழு உறுப்பினராக பேரவை விழாப் பணிகளும் அமைப்புப் பணிகளும் (2010-2012)
- பேரவை ஆயுள் உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக (2012 – இன்றும்)
- பேரவை இணையக் கட்டமைப்பு, பராமரிப்பு, நிர்வாகம் (2006 – 2012); பேரவைக்குச் செலவுகளேதுமில்லாமல்.
- பேரவை விழாவுக்கான பதிவுக்குழு, உணவுக்குழு, நிகழ்ச்சிக்குழு என பல்வேறு குழுக்களில் (2006 – 2018)
- மிசெளரி தமிழ்ச்சங்கத் தலைவராக (2006-2007); நிர்வாகக்குழு உறுப்பினராக (2007-2008)
- செயின்ட் லூயிஸ் முருகன் கோவிலின் நிறுவன உறுப்பினர்(2020 – இன்றும்)
ஆற்றிய மற்ற தமிழ்ப்பணிகள்
- பேரவைக்கான புதிய இணைய தளத்தை வடிவமைத்துச் செயற்படுத்தியமை
- பேரவை விழாவுக்கான பதிவினையும் கட்டணம் செலுத்துதலையும் டிஜிட்டல் ஆக்கியமை
- பேரவை விழாவுக்கான விருந்திநர் விசா, பயணச்சீட்டு போன்றவற்றை நிர்வகித்தமை
- பேரவை விழாவுக்கான விளம்பரப் பணிகள் மேற்கொண்டமை
- பேரவை இதழான அருவி என்பதனை மின்னிதழாகக் கட்டமைத்தமை
- பேரவையின் 20 ஆண்டுகால ஆவணங்களைச் சேகரித்து தொகுத்து ஆவணப்படுத்தியமை
- தமிழர் உரிமைக்கான கவன ஈர்ப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தமை
- தமிழ்க்கல்வி, கலை, இலக்கியம், பண்பாட்டுக்கான நிதிதிரட்டல் நிகழ்வுகளைக் கட்டமைத்தமை
- பேரவைக்கான இலச்சினை வடிவமைத்து ஒப்புதல் பெற்றுச் செயற்படுத்தியமை
- பேரவைக்கான சமூகவலைதளம், மின்னஞ்சற் கட்டமைப்புகளை உருவாக்கி நிர்வகித்தமை
- 2009 – 2011 காலகட்டங்களிலேயே பேரவை விழாக்களை நேரலையாக ஒளிபரப்பியமை
- அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம், பள்ளிகளுக்கான இலச்சினை வடிவமைப்பு
- தமிழ் அமைப்புகளுக்கான இணைய தளங்களைக் கட்டணமேதுமின்றி கட்டமைத்துக் கொடுத்தமை
- அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கான தகவற்தொடர்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி நிர்வகித்தல்
- ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டியமை
- சென்னை பெருவெள்ளம் நிதி திரட்டியமை