தமிழ்த் தொண்டன் விஜய் மணிவேல்
இந்தக் கட்டுரை 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. செறிவெனப்படுவது கூறியது மறாஅமை; பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்!! இவ்வண்ணமே, பண்புக்கும் அன்புக்கும் செறிவுக்கும் பொலிவூட்டி, அமெரிக்கத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பிறர் அறியா வண்ணம் தன் கடமை அறிந்து பெருந்தொண்டாற்றி வரும் இளைஞர்தான், செயல்வீரர் விஜய் மணிவேல் அவர்கள். எத்தகைய விளம்பரத்திற்கும் ஆசைப்படாதவர்; தெளிந்த சிந்தனைக்கு உரியவர்; உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களுக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கும் தொடர்ந்து தன்னாலான தொண்டினைச் செய்து வருபவர்! மேலும், வட அமெரிக்கத்…