தமிழ்த் தொண்டன் விஜய் மணிவேல்

தமிழ்த் தொண்டன் விஜய் மணிவேல்

இந்தக் கட்டுரை 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. செறிவெனப்படுவது கூறியது மறாஅமை; பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்!! இவ்வண்ணமே, பண்புக்கும் அன்புக்கும் செறிவுக்கும் பொலிவூட்டி, அமெரிக்கத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பிறர் அறியா வண்ணம் தன் கடமை அறிந்து பெருந்தொண்டாற்றி வரும் இளைஞர்தான், செயல்வீரர் விஜய் மணிவேல் அவர்கள். எத்தகைய விளம்பரத்திற்கும் ஆசைப்படாதவர்; தெளிந்த சிந்தனைக்கு உரியவர்; உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களுக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கும் தொடர்ந்து தன்னாலான தொண்டினைச் செய்து வருபவர்! மேலும், வட அமெரிக்கத்…

சொல்லாமற்செய்யும் பெரியோர் பலர்!

சொல்லாமற்செய்யும் பெரியோர் பலர்!

இந்தக் கட்டுரை 2009 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. வணக்கம்! பாருங்க, ஒரு சில நண்பர்கள் வார இறுதிங்றதால அலைபேசில அழைச்சுப் பேசிட்டு இருந்தாங்க. என்ன பழம, இன்னும் தமிழ்த் திருவிழாவுல இருந்து விடுபடலை போலிருக்குன்னு கேள்வியும் கேட்டாங்க. அவ்வளவு சுலுவுல விடுபடுற மாதிரியாங்க திருவிழா இருந்துச்சு? பெரியவங்க வாழ்க்கைய நல்லா அனுபவிச்சி, பிற்பாடு இலக்கியங்கள் படைச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க, அதனாலதானே சிற்றின்பம், பேரின்பம்ன்னெல்லாம் சொற்களைக் கண்டு, பின் விபரமா படைப்புகளைப் படைச்சிட்டுப் போயிருக்காங்க?! நுகரும் நேரத்துக்கு மட்டுமே…