FAQs

ஒப்பீடுகள்

இன்று

  • அனுபவமும் போதிய பங்களிப்புமற்றவர்கள் செயற்குழுவில் இருப்பதும், தேர்தலில் போட்டியிடுவதும்
  • உறுப்புச் சங்கங்களுடனான உறவில் தொய்வு, சீரின்மை, பாகுபாடு.
  • தனிநபர் வணிக நாட்டத்துக்கு இடமளிப்பு.
  • தகவற்தொடர்பில் சீரின்மை, பாராமை, போதாமை.
  • பேரவை மரபுகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை.
  • வெளிநபர்களின் குறுக்கீடுகளும் மேலாதிக்கமும்.

நாளை

  • பத்தாண்டுகளுக்கும் மேலான பங்களிப்புடையோர் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றுவர்
  • காலாண்டுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, வெளிப்படைத்தன்மை போற்றப்படும்.
  • பேரவை நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • மேம்பட்ட தகவற்தொடர்பு நெறிமுறைகள் கட்டமைக்கப்படும்.
  • தனிநபர் விளம்பரத் தன்மையைக் களைந்து மரபுகள் போற்றப்படும்.
  • ’பேரவை ஆர்வலர்கள், பேராளர்கள், தமிழ்ச்சங்கங்கள் மட்டுமே பேரவை’ என்பது மீளக் கட்டமைக்கப்படும்.

Have Questions? Drop us a line.

FAQs

கடந்த 20 ஆண்டுகளாக, பல்வேறு தளங்களில் தன்னார்வத் தொண்டு ஆற்றி வருகின்றேன். தமிழ்ச்சங்கத் தலைவராக, பேரவைச் செயற்குழு உறுப்பினராக, பேரவைக் குழுக்களின் தலைவராகவும் உறுப்பினராகவும், தமிழ்ச்சங்கத் தலைவர்கள் குழு நிர்வாகியாக, தமிழ்க்கல்வி மேம்பாட்டுக்குழு உறுப்பினராக, ஆற்றுப்படுகைகள் தூய்மைக்குழுவைச் சார்ந்த தொண்டனாக எனப் பல்வேறு பணிகள் செய்து வந்து கொண்டிருக்கும் வேளையில், பேரவையின் செயற்பாடுகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக ஆயுள் உறுப்பினரான நான் உணர்கின்றேன். இழந்த மரபினை மீட்டெடுக்கவும், பேரவைப் பணிகளில் மேம்பாடு காணவும் என்னால் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டு செம்மைப்படுத்த முடியுமெனக் கருதி போட்டியிடுகின்றேன்.

உண்மையில் சொல்லப் போனால், ஊரில் இருந்தவரைக்கும் எனக்கு எந்த உணர்வும் இருந்ததில்லை. என்னை ஒத்த வயதுள்ள இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு, பொழுதைக் கழிப்பதுதான் நான் செய்யும் வேலையாக இருந்தது. இங்கு வந்த பிறகுதான், சிறிது சிறிதாக என்னுள் தாயகத்தின் மீதும், தமிழர்களின்பாலும், தமிழ் மொழியின்பாலும் ஒரு பற்றுதல் ஏற்பட்டது. முதலில் சிற்சிறு பணிகளைத்தான் செய்து கொடுத்தேன். 2005 காலகட்டத்தில், அமெரிக்காவின் தமிழர் வளர்ச்சியில் இளைஞர்களுக்கான போதாமை இருந்தது. அதன்காரணம், நாம் செய்யாவிட்டால் வேறு எவர் செய்வர் எனக் கருதியதுதான் முக்கியமான காரணம்.

நான் மிசெளரி தமிழ்ச் சங்கத்திற்கு செய்யும் பங்களிப்பைக் கேள்வியுற்ற அன்றைய பேரவைத் தலைவர் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவே, இரவி சுந்தரம் அவர்களுடன் என்னை இணைத்துக் கொண்டேன். இரவி சுந்தரம் அவர்கள், பேரவையின் இணையதளம் மற்றும் தகவல்க் கட்டுமானப் பணிகளை கவனித்து வந்தார். அவரோடு சேர்ந்து நானும் செய்ய வேண்டிய பணிகளைப் பங்கிட்டுக் கொண்டேன். அதன்பிறகு முனைவர் முத்துவேல் செல்லையா அவர்களின் தலைமையின்கீழ் பல்வேறு பணிகள் என்னை வந்தடைந்தன.

2007ஆம் ஆண்டு ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டிருந்தேன். அவ்விழாவிற்குப் பிறகு முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் தலைவரானார். ஒரு நாள் அவருடன் அளவளாவிக் கொண்டிருக்கையில், எனது மனதிற்பட்டதைக் கூறியதும் அவர் என் மேல் நம்பிக்கை கொண்டவரானார். இது என் வாழ்வில் நடந்த ஒரு பெரிய நிகழ்வு என்றே குறிப்பிட வேண்டும். நல்லதொரு வாய்ப்பினை எனக்களித்தமைக்கு அவருக்கு என்றென்றும் நன்றி உடையவனாகிறேன்.

கிடையவே கிடையாது. கடந்த இருபது ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கையில், உற்சாகம், ஊக்கம் என்பது படிப்படியாகக் கூடிக் கொண்டேதான் வருகிறது. முனைப்பின் வீரியம் என்னுள் கிளர்ந்துவிட்டுப் பீறிடுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. உள்ளூர்த் தமிழ்ச் சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் என் குழந்தைகள். குழந்தைகளுக்காக உழைப்பதை எந்த ஒரு தமிழனும் அயர்ச்சியாக நினைப்பதில்லை.

பேரவையானது தமிழுக்கும், தமிழருக்குமான ஒரு கட்டமைப்பு. அதைப் போற்றுவது நம் கடமை. ஒவ்வொருவரும் அதை உணர்ந்து, எந்த ஒரு தயக்கமும் இன்றி நாட வேண்டும். ’கண்ணால் காண்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!’ என்பதை வலியுறுத்துகிறேன். தமிழ் உறவுகளுக்கான இடம் இது. புலம் பெயர்ந்த மண்ணில், நமது பண்பாடு பேணவும், மொழியை வளர்த்தெடுப்பதிலும் பேரவையின் பங்கு மகத்தானது.